ஆஸ்திரேலிய சிப்பியின் ஒரு இனம் உடலில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை சதர்ன் கிராஸ் பல்கலைக்கழகம் நடத்தியது.
Sacostria glomerata எனப்படும் சிட்னி பாறை சிப்பியில் உள்ள இரத்தத்தைப் போன்ற ஹீமோலிம்பில் உள்ள புரதம் உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இது நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்திறனை மேம்படுத்துகிறது என்று இந்த ஆய்வை நடத்திய ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி பாக்டீரியா தொற்றுக்கு சிகிச்சையளிக்க முடியும் என்று ஊகிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட சிப்பி இனத்தில் உள்ள ஹீமோலிம்ப் மனித நுரையீரலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.