அமெரிக்க விமான விபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தை உட்பட 5 பேர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
நேற்று, மருத்துவ போக்குவரத்து ஜெட் புறப்பட்ட 30 வினாடிகளில் விபத்துக்குள்ளாகி, பிலடெல்பியா பகுதியில் பல வீடுகள் மற்றும் வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளது.
நோயாளி மற்றும் மற்றொரு பயணி உட்பட நான்கு பணியாளர்கள் இறந்ததாகவும், உயிர் பிழைத்தவர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க விமானம் பயங்கர விபத்துக்குள்ளாகி இரண்டு நாட்களுக்குள், இதுபோன்ற மற்றொரு விபத்தால் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து சமூக வலைதளங்களில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வருத்தம் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





