கடந்த 2ம் திகதி மெல்பேர்ணில் நடைபெற்ற Midsumma Pride அணிவகுப்பில் விக்டோரியா மாகாண முதல்வர் ஜெசிந்தா ஆலன் பங்கேற்றுள்ளார்.
இம்முறை 30வது தடவையாக இடம்பெற்ற நடைபவனி ஆகும்.
விக்டோரியா மாநிலத்தில் வாழும் LGBTQA+ சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான மக்கள் இதில் இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
1996 ஆம் ஆண்டு முதல் Midsumma Pride அணிவகுப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மாநில எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதி எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் சவுத்விக் மற்றும் பல லிபரல் கட்சி எம்.பி.க்களும் இதில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
LGBTQA + சமூகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிவைத்து வெறுப்பூட்டும் பேச்சைத் தடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய மாநில நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மசோதாவை ஆதரிக்குமாறு விக்டோரியா முதல்வர் ஜெசிந்தா ஆலன் எதிர்க்கட்சிகளைக் கேட்டுக் கொண்டார்.