நேற்று முந்தினம் (பெப்ரவரி 2ம் திகதி) மெல்பேர்ணைச் சூழவுள்ள பிரதேசம் முழுவதும் புயல்காற்றுடன் கூடிய காலநிலை நிலவியது.
இதன் காரணமாக விக்டோரியாவின் சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக மெல்பேர்ணின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், புயலால் ஜீலாங் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பெல்மாண்டில் மரங்களின் கிளைகள் வீதியின் இருபுறங்களிலும் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விக்டோரியா முழுவதிலும் இருந்து தங்களுக்கு சுமார் 740 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக மாநில அவசர சேவைகள் (SES) வலியுறுத்தியுள்ளன.
அதிக எண்ணிக்கையிலான தொலைபேசி அழைப்புகள் Geelong பகுதியில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.