தென் ஆபிரிக்காவில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாகக் குற்றம் சாட்டியுள்ள ட்ரம்ப் அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப் கூறியதாவது:
“தென் ஆபிரிக்காவில் புதிய நில அபகரிப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடைபெறுகிறது. இதற்குத் துணையாக அமெரிக்கா நிற்காது. அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படும்”என்று கூறியுள்ளார்.