ஜெர்மனியில் நடந்த கார் விபத்தில் 11 வயது இலங்கைச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த விபத்தில் இறந்தவர் “கனகராஜா மோனிதா” என்ற மாணவி ஆவார்.
பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது ஒரு ஜெர்மன் தொலைபேசி நிறுவனத்திற்கு சொந்தமான வேன் மோதி அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெர்மனியின் லெவர்குசென் பகுதியில் உள்ள ஒப்லெட்டன் பகுதியில் உள்ள ரிங் ரோடு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஜெர்மன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.