காலை உணவில் முட்டைகளைச் சேர்ப்பது தொடர்பாக மோனாஷ் பல்கலைக்கழகம் ஒரு புதிய கண்டுபிடிப்பை செய்துள்ளது.
காலை உணவில் Oats சேர்த்துக் கொள்வது, உயிருக்கு ஆபத்தான இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், முட்டைகளை தவறாமல் சாப்பிடும் ஆரோக்கியமான பெரியவர்களுக்கு இதய நோயால் இறக்கும் ஆபத்து 29% குறைவு என்றும் தெரியவந்துள்ளது.
முட்டைகளை தவறாமல் சாப்பிடும் பெரியவர்களுக்கு, முட்டைகளை சாப்பிடாத பெரியவர்களை விட இதய நோய் வருவதற்கான ஆபத்து குறைவாக இருப்பது மேலும் தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சியில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 8,756 பெரியவர்கள் ஈடுபட்டனர்.
இருப்பினும், அமெரிக்க இதய சங்கம் சாதாரண கொழுப்பின் அளவைக் கொண்ட பெரியவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளை மட்டுமே சாப்பிட பரிந்துரைக்கிறது.
அதிக கொழுப்பு அளவு உள்ள பெரியவர்களில் முட்டை சாப்பிடுவது இறப்பு அபாயத்தை அதிகரிப்பதாக முந்தைய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.