மெல்பேர்ணில் உள்ள ஒரு மாளிகை 150 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டு, ஆஸ்திரேலிய சொத்து சாதனைகளை முறியடித்துள்ளது.
Toorakவ்-இல் உள்ள “Coonac Estate” என்று அழைக்கப்படும் இந்த பெரிய மாளிகை ஆஸ்திரேலிய வரலாற்றில் விற்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த வீடு என்று ரியல் எஸ்டேட் வலைத்தளம் தெரிவித்துள்ளது.
இத்தாலிய பாரம்பரியத்தின்படி வடிவமைக்கப்பட்ட இந்த வீடு 1867 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
20 அறைகளைக் கொண்ட இந்த இரண்டு மாடி வீட்டில் ஒரு டென்னிஸ் மைதானம் மற்றும் நீச்சல் குளமும் உள்ளது.
வீட்டைச் சுற்றியுள்ள சுற்றுப்புறங்களும் கவர்ச்சிகரமானதாக இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வீட்டை கோடீஸ்வர தொழிலதிபர் பால் லிட்டில் மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழக வேந்தர் ஜேன் ஹான்சன் ஆகியோர் விற்றதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் இந்த வீட்டை 2002 ஆம் ஆண்டு $14.5 மில்லியனுக்கு வாங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.