ஆஸ்திரேலியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் சாக்லேட் விலை உயரும் அபாயம் உள்ளது.
உலக சந்தையில் கோகோ பற்றாக்குறை இதற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் நிலவும் பாதகமான வானிலை மற்றும் கோகோ பயிர்களைப் பாதிக்கும் தொற்று நோய்கள் ஆகியவையும் இந்த கோகோ பற்றாக்குறைக்கு காரணமாக அமைந்துள்ளன.
கடந்த சில மாதங்களாக சாக்லேட் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கேரி மோர்டிமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய சந்தையில் சாக்லேட் விலைகள் எதிர்காலத்தில் 10% முதல் 20% வரை அதிகரிக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமை நுகர்வோர் நடத்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராசிரியர் மேலும் வலியுறுத்தினார்.