விக்டோரியாவில் உள்ள ஒரு பகுதி இளைஞர்கள் Baristaக்களாக மாறுவதற்கான இலவச பயிற்சி வகுப்பைத் தொடங்கத் தயாராகி வருகிறது.
விக்டோரியாவின் Corangamite-இல் உள்ள மாணவர்கள் ஏப்ரல் பள்ளி விடுமுறை நாட்களில் வேலைவாய்ப்புத் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுவதே இதன் நோக்கமாகும்.
15 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பாரிஸ்டா பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அவர்கள் கூறினர்.
இந்த ஒரு நாள் பாடநெறி, நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி உணவகங்களில் காபி தயாரிப்பது எப்படி என்பது குறித்து பங்கேற்பாளர்களுக்குக் கற்பிக்கும்.
ஆஸ்திரேலியாவிலும் உலகம் முழுவதும் Barista மிகவும் பிரபலமாகிவிட்டன என்பதும் விஷேட அம்சமாகும்.