Breaking NewsBREAKING NEWS : ஒஸ்ரியாவில் வீதியில் சென்றவர்கள் மீது கத்திகுத்து -...

BREAKING NEWS : ஒஸ்ரியாவில் வீதியில் சென்றவர்கள் மீது கத்திகுத்து – 14 வயது சிறுவன் பலி

-

ஒஸ்ரியாவில் வீதியில் நடந்து சென்றவர்கள் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒஸ்ரியாவின் தெற்கு பகுதியில் உள்ள வில்லாச் நகரில் நேற்று (15) வீதியோரம் நடந்து சென்றவர்கள் மீது சுமார் 23 வயது நிரம்பிய இனந்தெரியாத நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியதில் 14 வயது நிரம்பிய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகத்தின் பெயரில் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். அவர், சிரியாவைச் சேர்ந்தவர் என்பதும், ஒஸ்ரியாவில் சட்டப்பூர்வமாக குடியேறியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபரின் தனிப்பட்ட பின்னணி குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதோடு கைது செய்யப்பட்ட நபர், தானாக இந்த தாக்குதலை நடத்தினாரா? அல்லது வேறு நபர்களின் தூண்டுதலால் இவ்வாறு செய்தாரா? என்பது தெரியவில்லை. வேறு நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதால் அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

Latest news

சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றன 3 விக்டோரியன் நகரங்கள்

விக்டோரியாவில் உள்ள மூன்று நகரங்கள் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றுள்ளன.இந்த போட்டியில் விக்டோரியாவில் உள்ள 25 நகரங்கள் வருடாந்திர சிறந்த...

Influenza B வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் Influenza B வைரஸ் தொற்று சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் Influenza-இற்கான ஒத்துழைப்பு...

டீன் ஏஜ் கணக்குகளுக்கு Meta எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளைஞர்களின் சமூக ஊடக கணக்குகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த Meta மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது. இது இளைஞர்களைப் பாதுகாப்பற்ற அல்லது தேவையற்ற இணைப்புகளிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் செய்தி...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

பெண்களின் மாதவிடாய் தொடர்பான மறைக்கப்பட்ட ஆபத்துகள்

மாதவிடாய் நின்ற ஹார்மோன் சிகிச்சை (MHT) நிறுத்தப்பட்ட சில ஆண்டுகளில் பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியப் பெண்கள்...