Breaking NewsBREAKING NEWS: ஆஸ்திரேலியாவில் காலமானார் கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன்

BREAKING NEWS: ஆஸ்திரேலியாவில் காலமானார் கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன்

-

இலங்கையின் இசை ஆளுமையான ‘கலாசூரி’,’தேச நேத்ரு’ கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் திங்கட்கிழமை (17) அன்று ஆஸ்திரேலியாவில் காலமானார்.

அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என பல அடையாளங்களை கொண்டவர்.

இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ், சிங்கள மாணவர்களுக்கு தென்னிந்திய இசை, கர்நாடக சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளை கற்பித்து, ஆற்றல் மிகுந்த விரிவுரையாளராக வலம் வந்தவர்.

அதனால் இவரது பெயரிலேயே பல்கலைக்கழகத்தின் கட்புல, கலை, நாட்டிய, சங்கீத பீடத்துக்கான கட்டடமொன்று இயங்கி வருகின்றது.

அன்னாரின் மறைவு இலங்கையின் கலைத்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.

Latest news

உலகில் அரிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை இரத்தம்

கர்நாடகாவைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவருக்கு உலகிலேயே புதிய வகை இரத்தம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவர் இருதய அறுவை சிகிச்சைக்காகப் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து...

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பூச்சி கண்டுபிடிப்பு

வடக்கு குயின்ஸ்லாந்தின் வெப்பமண்டல மழைக்காடுகளில் ஒரு புதிய வகை ராட்சத குச்சி பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 44 கிராம் எடையுள்ள இந்தப் பெண் பூச்சி, ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் கனமான...

கத்திகளை அகற்றுவதற்கான சலுகை காலத்தை அறிவித்தார் Machete

விக்டோரியா அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒரு எச்சரிக்கை உள்ளது, இதன் மூலம் கத்தியை வைத்திருப்பது, எடுத்துச் செல்வது அல்லது வாங்குவது சட்டவிரோதமானது. இந்த...

YouTube-இல் சாதனை படைத்துள்ளார் MrBeast

YouTuber MrBeast, 400 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று, Play பட்டனை அடைந்த உலகின் முதல் YouTuber என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதை YouTube தலைமை நிர்வாக அதிகாரி...

சிட்னியில் Legionnaires நோய் பரவியதில் ஒருவர் பலி

சிட்னியில் Legionnaires நோய் பரவியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் மாத இறுதியில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த Potts Point-ஐ சேர்ந்த எண்பது...

YouTube-இல் சாதனை படைத்துள்ளார் MrBeast

YouTuber MrBeast, 400 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று, Play பட்டனை அடைந்த உலகின் முதல் YouTuber என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதை YouTube தலைமை நிர்வாக அதிகாரி...