ஆஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்களுக்கு இன்று தீ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் இன்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்று வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மெல்பேர்ண் மற்றும் அடிலெய்டில் வசிப்பவர்கள் முறையே 36 டிகிரி செல்சியஸ் மற்றும் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
விக்டோரியாவின் மவுண்ட் காம்பியர் மற்றும் மில்டுரா பகுதிகளிலும், தெற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது.
பெப்ரவரி மாத சராசரி வெப்பநிலையை விட இன்றைய வெப்பநிலை 6 முதல் 12 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிடுகிறது.
இதன் விளைவாக, தெற்கு ஆஸ்திரேலியாவிலும், மெல்பேர்ண் மற்றும் Mount Lofty Range உள்ளிட்ட பகுதிகளிலும் திறந்தவெளி எரிப்பு தடைசெய்யப்படும்.