மெல்பேர்ணல் உள்ள கிளாட்ஸ்டோன் பார்க் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 20 மாணவிகளின் போலி நிர்வாணப் புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டது தொடர்பாக 16 வயது மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், சம்பந்தப்பட்ட பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் குழுவிற்கு இடையே நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இணையத்தில் வெளியிடப்பட்ட போலி நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விக்டோரியன் கல்வித் துறை சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.