Newsபணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

-

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் – இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 22ம் திகதி 6 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது.  ஆனால் திட்டமிட்டபடி அவர்களுக்கு ஈடாக இஸ்ரேல் பிடித்துவைத்துள்ள பலஸ்தீன கைதிகளில் 650 பேரை விடுதலை செய்ய மறுத்துள்ளது. வரும் மார்ச் 1 ஆம் திகதியுடன் போர் நிறுத்தம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்

“ஹமாஸின் தொடர்ச்சியான மீறல்களைக் கருத்தில் கொண்டு நமது பணயக்கைதிகளை அவமதிக்கும் அவமானகரமான விழாக்கள் மற்றும் பணயக்கைதிகளை பிரச்சாரத்திற்காக இழிவாகப் பயன்படுத்துவதன் காரணமாக கடந்த 22ம் திகதி திட்டமிடப்பட்ட பலஸ்தீன கைதிகளின் விடுதலையை தாமதப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது ” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று 6 இஸ்ரேலிய கைதிகள் விடுவிக்கப்படும்போது அதில் ஒருவர் ஹமாஸ் அமைப்பினர் ஒருவருக்கு நெற்றியில் முத்தமிட்ட காட்சி வைரலானதை தொடர்ந்து இஸ்ரேல் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறி வருவதாக ஹமாஸ் மூத்த அதிகாரி பாஸ்ஸெம் நயீம் தெரிவித்தார்.

 இது தொடர்பாக அவர் கூறுகையில், “போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் போது, இஸ்ரேலிய இராணுவம் 100  பலஸ்தீனர்களைக் கொன்றது.

இதுபோன்று தொடர்ந்து வரும் செயல்கள் ஒப்பந்தத்தை முறிக்கவும், மீண்டும் போருக்குத் திரும்புவதற்கான அதன் விருப்பத்தை வெளிப்படுத்தும் வலதுசாரி இஸ்ரேல் அரசாங்கத்தின் ஒரு மோசமான தந்திரம் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...