சீனா, மணிக்கு 450 km வேகத்தில் செல்லும் ரயிலொன்றை அறிமுகம் செய்துள்ளது. ‘CR450’ புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் குறுகிய தொலைவு உள்ள நகரங்களுக்கு இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் அதிநவீன மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அதிவேகமாக செல்லக் கூடிய வகையில், குறைந்த எடை கொண்ட கார்பன் பைபர் மற்று அலுமினியம் போன்றவை மூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது
பீஜிங் – ஷாங்காய் போன்ற 4 மணி நேர தொலைவு கொண்ட நகரங்களுக்கு இடையே இந்த ரயிலை இயக்க சீனா திட்டமிட்டுள்ளது. ரயிலின் உட்புறமும் பயணிகள் சொகுசாக பயணிக்க பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
சீனாவில் தற்போது 48,000 km தொலைவுக்கு அதிவேக ரயில் போக்குவரத்து வசதி உள்ள நிலையில், 2030 ஆம் ஆண்டுக்குள் இதை 60,000 km தூரத்திற்கு அதிகரிக்க வேண்டும் என்ற இலக்குடன் சீன ரயில்வே திணைக்களம் செயற்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.