Breaking Newsஉலக அளவில் முடங்கியது எக்ஸ் சமூக வலைதளம்

உலக அளவில் முடங்கியது எக்ஸ் சமூக வலைதளம்

-

உலகம் முழுவதும் X தளம் (Twitter) மீண்டும் முடங்கியுள்ளது. ஒரே நாளில் மூன்றாவது முறையாக முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சமூக வலைதளங்கள், இணையதளங்களின் முடக்கங்களை கண்காணிக்கும் Downdetector.com தரவுகளின் படி நேற்று (மார்ச் 10) இரவு 9.00 மணியளவில் முதல்முறையாக X தளம் முடங்கியது. சில மணி நேரங்களில் பிரச்சினை சரிசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் அதிகாலை 1 மணிக்கு X தள செயல்பாடுகள் முடங்கின. அதன்பிறகு மீண்டும் சரிசெய்யப்பட்டு, தற்போது மூன்றாவது முறையாக 2.15 மணிக்கு மீண்டும் தளம் முடங்கியது. இப்போதுவரை முடக்கம் நீடித்துவருகிறது.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் X தளம் முடங்கியுள்ளதாக பயனர்கள் புகாரளித்து வருகின்றனர்.

உலகளவில் 40,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் இந்த முடக்கம் குறித்து புகார்களைப் பதிவு செய்துள்ளனர். Downdetector அறிக்கையின்படி, 56 சதவீத பயனர்கள் தொலைக்காட்சி செயலியில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

அதே நேரத்தில் 33 சதவீதம் பேர் வலைத்தளத்தில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மேலும் 11 சதவீதம் பேர் சர்வர் இணைப்புகளில் சிக்கல் இருப்பதாகப் புகாரளித்துள்ளனர்.

இந்த திடீர் தடங்கல் குறித்து X தளமோ அல்லது எலான் மஸ்க் தரப்போ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இது எப்போது சரிசெய்யப்படும் என்பது குறித்த தகவல்களும் இல்லாததால் X பயனர்கள் Facebook, Instagram உள்ளிட்ட மற்ற சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Latest news

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

மெல்பேர்ணில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – முற்றிலுமாக எரிந்து நாசம்

மெல்பேர்ண், Bentleigh East-இல் உள்ள Forster Crescent-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ...

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர்...