சீனாவில் செயற்கை நுண்ணறிவு செயலி Deepseek செயலி மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது சீனாவில் இருந்து மோனிகா என்ற புதிய செயற்கை நுண்ணறிவு செயலி வெளியாகியுள்ளது.
மோனிகா என்ற புதிய செயற்கை நுண்ணறிவு செயலி , வழக்கமான மற்ற AI Chatbot நாம் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதிலளிக்கும்.
அதே நேரத்தில், மோனிகாவிடம் ஒரு பணியை கொடுத்தால், அதுவே முழுவதுமாக ஆய்வு செய்து பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் முடித்துக் கொடுத்துவிடும் ஆற்றல் கொண்டதாக கூறப்படுகிறது.
உதாரணமாக, “காலநிலை மாற்றம் குறித்த அறிக்கை தேவை” என்று கேட்டால், அது ஆய்வு செய்து, அட்டவணைகளை தயாரித்து, அனைத்தையும் ஒருங்கிணைத்து இறுதி ஆவணமாக வழங்கிவிடும். அது சம்பந்தப்பட்ட பிற கேள்விகளை நாம் கேட்க வேண்டிய அவசியமே இருக்காத அளவுக்கு அது வேலைகளை திறம்பட முடித்து விடுகிறதாம்.
அதேபோல ஒரு விஷயத்தை நாம் கேள்வியாக கேட்டால், உடனடியாக browsing செய்து, screenshot எடுத்து, online பணிகளை பதிவு செய்து, அறிக்கையாக தயாரித்து, PowerPoint விளக்கமாகவும் மோனிகா வழங்குகிறது.
இந்நிலையில் உலகின் AI தொழில்நுட்ப வளர்ச்சியில் இது சீனாவின் ஒரு புதிய புரட்சி என கருதப்படுகிறது.