தாயிடமிருந்து வோம்பாட் (wombat) குட்டியைப் பறித்த அமெரிக்கப் பெண் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறிவிட்டதாக அரசாங்கம் உறுதிப்படுத்துகிறது.
ஆஸ்திரேலியாவின் மொன்டானாவில் உள்ள ஒரு சாலையின் அருகே ஒரு குழந்தை வோம்பாட்டை சுமந்துகொண்டு தனது காரை நோக்கி ஓடுவதைக் காட்டும் வீடியோவை சாம் ஜோன்ஸ் என்ற பெண் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், வோம்பாட்டின் தாய் அந்தப் பெண்ணைத் துரத்துவதையும் காட்டுகிறது.
இந்த காணொளி சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும் ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்த சம்பவம் தொடர்பாக விரைவான நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த அமெரிக்கப் பெண்ணின் விசாவை உள்துறைத் துறையும் மறுஆய்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று பெர்த்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த சம்பவத்தை கடுமையாகக் கண்டித்தார்.
“ஒரு குழந்தையை அதன் தாயிடமிருந்து பிரிப்பது அந்த விலங்கிற்கு மிகுந்த துன்பத்தைத் தரும் விஷயம்” என்று அவர் கூறினார்.