உலகின் மிகவும் துர்நாற்றம் வீசும் மலராகக் கருதப்படும் “பிண மலர்” (Corpse Flower), நேற்றிரவு (13) மெல்பேர்ணில் பூக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்காள் வெளியாகியுள்ளன.
மெல்பேர்ண் குடியிருப்பாளர்கள் Bayside புறநகரில் உள்ள Collectors Corner Garden World-இல் இந்த அரிய நிகழ்வைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் விக்டோரியாவில் இந்தப் பூ பூப்பது இது மூன்றாவது முறையாகும்.
உலகெங்கிலும் உள்ள பயனர்கள் இந்த அற்புதமான நிகழ்வை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மலர் அழுகும் சதையின் துர்நாற்றத்தை ஒத்த ஒரு துர்நாற்றத்தை வெளியிடுவதாகக் கூறப்படுகிறது.