Sportsபோதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர்

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர்

-

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆஸ்திரேலியா முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சிக்கியுள்ளார்.

1998 ஆம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலியா அணிக்காக விளையாடியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் ஸ்டூவர்ட் மெக்கில்.

சுழற்பந்து வீச்சாளரான இவர், அவுஸ்திரேலியா அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 208 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு சர்வேதச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஸ்டூவர்ட் மெக்கில்.

கடந்த 2021 ஆம் ஆண்டு, 3,30,000 அமெரிக்க டொலர் மதிப்பு 1 கிலோ அளவிலான கொக்கைன் எனும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புள்ளதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு சிட்னி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, “சிட்னியின் வடக்கு கடற்கரையில் உள்ள தனது உணவகத்தில் வைத்து, வழக்கமாக போதைப் பொருள் வழங்கும் நபரை தனது உறவினரான Marino Sotiropoulos என்பவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதன் மூலம் போதைப் பொருள் கடத்தப்பட்டதாகவும் மெக்கில் மீது குற்றம்சாட்டப்பட்டது. தனக்கு இதில் தொடர்பில்லை என இந்த குற்றச்சாட்டை மெக்கில் மறுத்துள்ளார். 

மெக்கிலின் ஈடுபாடு இல்லாமல் இந்த கடத்தல் நடைபெற்றிருக்க முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்த வழக்கில் அவருக்கு ஈடுபாடு உள்ளதால் அதற்கேற்ற அளவிலான தண்டனையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அவருக்கான தண்டனை அறிவிப்பை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.

Latest news

மிகப்பெரிய மென்பொருள் மாற்றத்திற்கு தயாராகும் ஆப்பிள்

ஆப்பிள், தனது iPhone, iPad மற்றும் Mac சாதனங்களுக்காக வரலாற்றில் மிகப்பெரிய மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொள்ள உள்ளதாக நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. iOS 19, iPadOS...

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத்திரும்புவதில் மீண்டும் தாமதம்

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத்திரும்புவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்...

சீன கப்பல் மிரட்டல் – தமது கப்பலில் ஏவுகணையை பொருத்தும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலிய கடல் பரப்பில், மிகவும் சக்த்திவாய்ந்த சீனாவின் போர் கப்பல் ஒன்று உலவி வருகிறது. பல தடவைகள் எச்சரிக்கை விடுத்தும், அதனை அசட்டை செய்த சீன...

அங்கோர்வாட் கோயிலில் புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டுபிடிப்பு

கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோயில் வளாகம், இந்து மற்றும் பௌத்தமத வழிபாட்டு தலமாகவுள்ளது. தெற்காசியாவின் மிக முக்கியமான அகழ்வாராய்ச்சி பகுதியாக கருதப்படும் இப்பகுதியில் கோயிலை உள்ளடக்கி 400...

ஆஸ்திரேலியாவின் இளைய கொலைகாரனுக்கு விடுதலையா?

ஆஸ்திரேலியாவின் இளைய கொலைகாரன் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த வார இறுதியில் அவர் விடுவிக்கப்படுவார் என்று ஊகிக்கப்படுகிறது. இதற்குக் காரணம், சம்பந்தப்பட்ட குற்றவாளியை சிறையில்...

மெல்பேர்ணில் இரண்டு கட்டுமானத் திட்டங்களை கடுமையாக எதிர்க்கும் Greens Party

மெல்பேர்ணில் உள்ள இரண்டு பொது வீட்டுவசதித் திட்டங்களை விக்டோரியன் அரசாங்கம் கவனிக்கத் தவறிவிட்டதாக பசுமைக் கட்சி குற்றம் சாட்டுகிறது. மெல்பேர்ண், ஃப்ளெமிங்டன் மற்றும் வடக்கு மெல்பேர்ணில் முன்மொழியப்பட்ட...