உக்ரைன் அமைதி காக்கும் நடவடிக்கை குறித்த முக்கியமான கலந்துரையாடலில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று (15) கலந்துகொண்டார்.
பல மேற்கத்திய உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்தக் கலந்துரையாடல், குழு தொலைபேசி உரையாடலாக நடத்தப்பட்டது.
பிரிட்டிஷ் பிரதமரின் அழைப்பின் பேரில் பிரதமர் அல்பானீஸ் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றார்.
பிரான்ஸ், நியூசிலாந்து, கனடா, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களும் இதில் இணைந்துள்ளனர்.
உக்ரேனிய அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதில் ஆஸ்திரேலியாவும் கவனம் செலுத்துகிறது.
இருப்பினும், இந்த விஷயத்தில் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு ஐரோப்பிய நாடுகளின் அரச தலைவர்களுடன் கலந்துரையாட பிரதமர் அல்பானீஸ் முடிவு செய்துள்ளார்.
உக்ரைன் கேட்டுக் கொண்டால் ஆஸ்திரேலியா அமைதி காக்கும் படையினரை அனுப்பத் தயங்காது என்று பிரதமர் அல்பானீஸ் முன்பு கூறியிருந்தார்.