Newsட்விட்டர் இலச்சினையை ஏலத்தில் விட முடிவு

ட்விட்டர் இலச்சினையை ஏலத்தில் விட முடிவு

-

ட்விட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோ எடை கொண்ட நீலநிற பறவை இலச்சினையை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டுவந்த ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கி எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார். அதன் பிறகு எக்ஸ் பக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதனிடையே ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட ட்விட்டர் நிறுவனத்தின் நீல நிறப் பறவை இலச்சினையை ஏலத்திற்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏலத்தின் ஆரம்ப விலையாக 21,664 டொலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுப்பவர்கள் இலச்சினையை எடுத்துச் செல்லும் போக்குவரத்து செலவுக்கும் சேர்த்து பணம் செலுத்த வேண்டும் என ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இலச்சினை 12 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்டது. இதன் எடை 254 கிலோ ஆகும் . இந்த ஏலமானது மார்ச் 20ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அதன் பிறகு அதிக தொகை கோரியவர்களுக்கு இலச்சினை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

உலகின் ‘வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்’ விபத்தில் மரணம்

உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை என்று நம்பப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் Fauja Singh, கார் மோதி உயிரிழந்தார். உயிரிழக்கும்போது அவருக்கு 114...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

விக்டோரியாவில் விமானத்தை கடத்த முயன்ற இளைஞனுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை

விக்டோரியாவில் விமானத்தைக் கடத்த முயன்ற மைனர் ஒருவரின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், விக்டோரியாவில் உள்ள Avalon விமான நிலையத்தில், 17 வயது இளைஞன்...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் போக்குவரத்துச் சட்டங்களில் புதிய மாற்றம்

ஜூலை 13 முதல் ஆஸ்திரேலிய மாநிலம் ஒன்றில் புதிய போக்குவரத்துச் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் மின்-ஸ்கூட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன. மேலும் மிதிவண்டி அல்லது மின்-ஸ்கூட்டர்களை ஓட்டுபவர்களுக்கு...