ஆஸ்திரேலிய பணவீக்கம் மீண்டும் குறைந்துள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகத்தின் மாதாந்திர நுகர்வோர் விலை குறியீட்டு அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.
அதன்படி, பெப்ரவரி வரையிலான 12 மாதங்களில் பணவீக்கத்தில் 2.5 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாக சிறிதளவு சரிவு ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அடுத்த வட்டி விகித முடிவு வெளியாக ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில் பணவீக்கத்தில் சரிவு ஏற்பட்டது.
ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவு ஏப்ரல் முதல் திகதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.