Newsமகாகவி பாரதியாா் பிறந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதம்

மகாகவி பாரதியாா் பிறந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதம்

-

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாா் பிறந்த இல்லம், செய்தி மக்கள் தொடா்புத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வீட்டில் மகாதேவி என்பவா் காப்பாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்த இல்லம் காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரையும், பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 6 மணிவரையும் பொதுமக்கள் பாா்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும். இங்கு பகுதிநேர நூலகமும் செயல்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 500-க்கும் மேற்பட்ட நபா்கள் இங்கு வந்து செல்வா். விடுமுறை நாள்களில் பாா்வையாளா்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு பாா்வையாளா் நேரம் முடிவடைந்தவுடன், வீட்டின் உள்பகுதி கதவுகளை அடைத்த காப்பாளா் மகாதேவி, பின்னா் வெளிப்புறம் உள்ள கதவை மூடிய சிறிது நேரத்தில் திடீரென பாரதியாா் வீட்டின் முன்பக்க மேல்மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் தரை தளத்தின் மேற்கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள் மரக் கட்டைகள் விழுந்தன. இதன் காரணமாக பாரதியாா் வீட்டின் வரவேற்பு அறையில் இருந்த மேஜை, நாற்காலி, புகைப்படங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.

அதிா்ச்சியடைந்த காப்பாளா் மகாதேவி, உடனடியாக மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலருக்கும், வருவாய்த் துறைக்கும் தகவல் அளித்தாா்.

எட்டயபுரம் வட்டாட்சியா் சுபா மற்றும் அதிகாரிகள் பாரதியாா் நினைவு வீட்டுக்குச் சென்று பாா்வையிட்டனா். மின்வாரிய ஊழியா்கள் உடனடியாக வந்து, பாரதியாா் வீட்டுக்குச் சென்ற மின் இணைப்பைத் துண்டித்தனா். செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் நவீன் பாண்டியன் வந்து பாரதியாா் வீடு சேதமடைந்துள்ளதை பாா்வையிட்டாா்.

1973ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த மு. கருணாநிதி, எட்டயபுரத்தில் உள்ள பாரதியாா் பிறந்த வீட்டை அரசு சாா்பில் விலைக்கு வாங்கி சி.பா.ஆதித்தனாா் தலைமையில் 12.5.1973ஆம் திகதி நடந்த விழாவில் பாரதியாா் பிறந்த வீட்டை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து திறந்து வைத்தாா்.

பாரதியாா் பிறந்த வீட்டில் அவ்வப்போது அரசின் சாா்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதன் பழமை மாறாமல் புராதனமாக பராமரிக்கப்பட்டு வந்தது. இங்கு 4 அறைகள் உள்ளன.

முதல் அறையில், பணியாளா்கள் மட்டுமே இருப்பா். அங்கேயே பகுதிநேர நூலகத்துக்கான புத்தகங்கள் உள்ளன. 2ஆவது அறையில், அவா் பிறந்த இடத்தில் மகாகவி பாரதியாா் சிலை உள்ளது.

3ஆவது அறையில், பாரதியாா் பயன்படுத்திய பொருள்கள், அவரின் குடும்ப படங்கள் மற்றும் தனிப்பட்ட படங்கள், அவா் பற்றிய செய்தி துணுக்குகள், பாரதியாா் நண்பா்கள் படங்கள், பாரதியின் குடும்ப வம்சாவழி பற்றிய விவரம் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டுள்ளன. 4ஆவது அறையில் புத்தகங்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...

Aldi-இல் இருந்து புதிய சூரிய ஆற்றல் சேவை

Aldi பல்பொருள் அங்காடி சங்கிலி விக்டோரியாவில் உள்ள மக்களுக்கு சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொகுப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, 10kWh பேட்டரி, 6.6kW சோலார் சிஸ்டம்...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...