மாரடைப்பு ஏற்பட்டால் விரைவாக குணமடைவதற்கான சிறந்த மருத்துவ சிகிச்சையுடன் ஆஸ்திரேலியாவில் முன்னணி மாநிலமாக விக்டோரியா அடையாளம் காணப்பட்டுள்ளது.
விக்டோரியன் ஆம்புலன்ஸ் சேவையின் சமீபத்திய அறிக்கையின்படி இந்த தகவல் தெரியவந்துள்ளது.
அதன்படி, மாரடைப்பு சிகிச்சைக்கு உலகின் சிறந்த நகரங்களில் மூன்றாவது இடத்தை மெல்பேர்ண் பிடித்துள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் இடங்களை அமெரிக்கா மற்றும் டென்மார்க்கில் உள்ள இரண்டு நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
விக்டோரியாவில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களில், 79 சதவீதம் பேர் விரைவாக குணமடைந்துள்ளனர். மேலும் 84 சதவீதம் பேர் குறுகிய காலத்திற்குள் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.