கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலிய கடற்கரைகளில் பிளாஸ்டிக் மாசுபாடு குறைந்துள்ளதாக CSIRO ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது கிட்டத்தட்ட 39 சதவீதம் குறைந்துள்ளதாக ஆராய்ச்சி அறிக்கை குறிப்பிடுகின்றது.
நேற்று வெளியிடப்பட்ட இந்த மதிப்பாய்வின்படி, 1,907 ஆய்வுகளில் 8,383 பல்வேறு குப்பைத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த குப்பைகளுக்கு இடையில் சிகரெட் துண்டுகளும் polystyrene துண்டுகளும் பொதுவாகக் காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
2030 ஆம் ஆண்டுக்குள், உலகளவில் நீர்வாழ் சூழல்களில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு ஆண்டுக்கு 53 மெட்ரிக் டன்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துதல், பொது விழிப்புணர்வு திட்டங்களைத் தொடங்குதல் மற்றும் பயனுள்ள பிரச்சாரங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்தல் போன்ற திட்டங்களை CSIRO ஆராய்ச்சி நிறுவனம் ஆஸ்திரேலியாவிற்காக முன்மொழிந்துள்ளது.