ஆஸ்திரேலியாவில் உள்ள ஊழியர்கள் தங்கள் முதலாளிக்கு எதிராக இலவச சட்ட ஆலோசனையைப் பெறலாம்.
The Fair Work Ombudsman மூலம் இந்த இலவச சட்ட ஆலோசனையை பெறலாம்.
பணியிட துன்புறுத்தல், சம்பளப் பிரச்சினைகள் போன்ற வழக்குகளில் The Fair Work Ombudsman மூலம் சட்ட உதவியையும் நீங்கள் பெறலாம்.
தொழிலாளர் சட்டங்களை மீறும் போது அந்த நிறுவனத்திடம் ஆலோசனை பெறலாம் என்றும் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் கூறுகிறது.
ஊழியர்கள் தகவல், ஆலோசனை அல்லது உதவிக்கு FWO-வை 13 13 94 என்ற எண்ணில் அழைக்கலாம்.
FWO உடன் இணைந்த பிற சமூக சட்ட மையங்கள் அல்லது தொழில்முறை சங்கங்களிடமிருந்தும் சட்ட உதவியைப் பெறலாம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.