ஆஸ்திரேலியாவில் பணக்காரர்கள் வசிக்கும் புறநகர்ப் பகுதிகள் குறித்த அறிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மெல்பேர்ணின் Toorak பகுதியில் மிகப்பெரிய செல்வந்தர்கள் குழு வாழ்கிறது.
அங்கு 22 செல்வந்தர்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது.
சிட்னியின் Vaucluse பகுதியில் 13 செல்வந்தர்களும், Point Piper பகுதியில் 12 செல்வந்தர்களும் வசிக்கின்றனர்.
ஏழு செல்வந்தர்கள் Mosman-இலும், ஆறு பேர் ஹண்டர்ஸ் ஹில்லிலும், ஐந்து பேர் நியூ சவுத் வேல்ஸின் Bellevue Hill-இலும் வசிக்கின்றனர்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் Mosman Park-இல் நான்கு பேரும், டால்கீத்தில் நான்கு பேரும், மெல்பேர்ணின் தெற்கு யாராவில் நான்கு பேரும் வசிப்பதாக சமீபத்திய அறிக்கை காட்டுகிறது.