அடிலெய்டு விமான நிலையத்தில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு விமான நிலையத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மூச்சுத் திணறி அவர் இறந்ததாகக் கூறப்படுகிறது.
50 வயது மதிக்கத்தக்க இந்த நபர் திடீரென மயங்கி விழுந்ததாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய எதுவும் இல்லை என்று மத்திய போலீசார் தெரிவித்துள்ளனர்.
மரணம் குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.