Newsஇந்தியாவில் இருந்து வெளியேறிய அப்பிள் நிறுவனம்

இந்தியாவில் இருந்து வெளியேறிய அப்பிள் நிறுவனம்

-

வரிவிதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அப்பிள் வகை கையடக்கத் தொலைபேசிகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளில் அப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பரஸ்பர வரி விதிப்பை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து அப்பிள் நிறுவனம் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக, அப்பிள் நிறுவனம் தனக்குச் சொந்தமான 5 விமானங்களில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அப்பிள் வகை கையடக்கத் தொலைபேசிகளை இடமாற்றம் செய்துள்ளது .

டொனால்ட் ட்ரம்ப், அதிக வணிகத்தை மேற்கொள்ளும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு அதிக வரியை விதித்து வருகிறார்.

அதிக வரி வசூலிக்கும் இந்தியா, சீனா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு 10% பரஸ்பர வரி விதிப்பை ஏப். 5 முதல் அமுலுக்குக் கொண்டுவந்தார்.

இதன்படி இந்த நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்.

இந்த வரி விதிப்பில் இருந்து தப்பிக்கும் வகையில் தற்காலிகத் தீர்வை அப்பிள் நிறுவனம் எடுத்துள்ளது. அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அப்பிள் வகை கையடக்கத் தொலைபேசிகளை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்ல அப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

திருத்தப்பட்ட வரி விதிப்பால் சர்வதேச வணிகக் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க சந்தைகளில் சில்லறை விற்பனையில் எந்தவித மாற்றங்களையும் கொண்டுவந்துவிடக் கூடாது என்பதற்காக அப்பிள் நிறுவனம் இந்த முயற்சியை எடுத்துள்ளது.

இது தற்காலிகத் தீர்வாக இருக்குமே தவிர, நிரந்தர தீர்வாக அமையாது எனவும் அப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...

நடைபாதையில் நடந்து சென்ற இளம் பெண்ணை கொலை செய்த ஓட்டுநர்

குயின்ஸ்லாந்தில் எட்டு பாதசாரிகள் கொண்ட குழுவில் காரை ஓட்டிச் சென்று 24 வயது நியூ சவுத் வேல்ஸ் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்...

100க்கும் மேற்பட்ட புத்தகக் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய புத்தக விற்பனையாளர்களின் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சில்லறை மற்றும் துரித உணவு தொழிலாளர்கள்...

Green Card-ஐ நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவு

"Green Card" அல்லது அமெரிக்க விசா பெறுவதற்கான லாட்டரி செயல்முறை உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் Khristi Noem அறிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட்...