விர்ஜின் ஆஸ்திரேலியா கடந்த 5 ஆண்டுகளில் 61,000 பயணிகளுக்கு பணத்தைத் திருப்பித் தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதை மாற்றங்களுக்கு அதிக கட்டணம் வசூலித்த பிறகு இந்தக் கொடுப்பனவுகள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாடிக்கையாளர் பயணத்திட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, அதன் டிக்கெட் விலை நிர்ணய முறைகளில் பிழை இருப்பதைக் கண்டறிந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பிழைகள் ஏப்ரல் 21, 2020 முதல் மார்ச் 31, 2025 வரை நிகழ்ந்தன.
அதன்படி, இந்த காலகட்டத்தில் முன்பதிவு செய்த பயணிகளில் 0.1 சதவீதத்தை இது பாதித்துள்ளதாக விர்ஜின் ஆஸ்திரேலியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை விமான நிறுவனம் தொடர்பு கொண்டு அவர்களுக்கு $55 திருப்பித் தரப்படும்.