அரசியலுக்கு வருகிறாரா நடிகை த்ரிஷா?

0
444

நடிகை த்ரிஷா அரசியலுக்கு வரவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியுள்ளன.இந்த தகவல் உறுதிபடுத்தப்படாத நிலையில், ரசிகர்கள் இதனை வரவேற்று கருத்து கூறுகின்றனர்.த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாகவும் தகவல் பரவியுள்ளது.தனுஷ் நடித்த கொடி படத்தில் அரசியல்வாதி கேரக்டரில் த்ரிஷா நடித்திருப்பார்.த்ரிஷா நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா, குந்தவை ரோலில் நடித்துள்ளார்.

த்ரிஷா, தமிழ் மற்றும் மலையாள படங்களில் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்துள்ள சதுரங்க வேட்டை 2 படமும் அக்டோபர் 7 ம் தேதி ரிலீசாக உள்ளது. மலையாளத்திலும் த்ரிஷா சில படங்களில் நடித்து வருகிறார்.

Previous articleசிட்னியில் நிலக்கரி சுரங்கம் – எரிபொருள் – எரிவாயு விளம்பர விளம்பரங்களுக்கு தடை
Next article37,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் தூங்கிய விமானிகள்