Newsஇணையத்தில் டிரெண்டாகும் SkinnyTok - ஆபத்து குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள்

இணையத்தில் டிரெண்டாகும் SkinnyTok – ஆபத்து குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள்

-

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது புதிது புதிதாக சில விடயங்கள் டிரெண்ட் ஆகும்.

யாரோ ஒருவர் ஒரு விடயத்தை செய்து அதை சமூகவலைத்தளத்தில் பதிவிட, அது குறித்து ஆராயாமல் இணையவாசிகள் பலரும் அதை பின்தொடர்வார்கள். சில டிரெண்ட்கள் ஆபத்தாக இருந்தாலும் கூட பலரும் அதை பின்தொடர்வார்கள்.

அதே போல் தற்போது சமூகவலைத்தளங்களில் ஸ்கின்னி டொக் (SkinnyTok), என்ற புதுவகையான விடயம் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த SkinnyTok என்பது, உடல் இளைப்பது, ஒழுங்கற்ற உணவு பழக்கம், பட்டினியாக இருப்பது ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.

இதனை பின்பற்றுபவர்கள், ‘பசி உணர்வு என்பது இயற்கையான உயிரியல் சமிக்ஞை அல்ல; என்று பின்தொடர்பவர்களுக்குக் கற்பிக்கின்றனர்.

மேலும், அதிக உணவு உட்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே, அதுவும் குறைந்த அளவில் உணவு உட்கொள்ள வேண்டும். இயற்கையான பசியை அடக்க, அதிகப்படியான தண்ணீர் காபி போன்ற திரவ பானங்களை உட்கொள்ள வேண்டும் போன்ற ஆபத்தான நடைமுறைகளை பரிந்துரைகின்றனர்.

ஆனால் இதன் பின்னணியில் உள்ள ஆபத்துகள் குறித்து, மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஆபத்தான போக்குகள், இதயப் பிரச்சினைகள், மலட்டுத்தன்மை வளர்சிதை மாற்றம், மன ஆரோக்கியம், ஹார்மோன் ஒழுங்குமுறை ஆகியவற்றிற்கு வழிவகுப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஒல்லியாக இருப்பதே அழகான மற்றும் ஆரோக்கியமான உடலமைப்பு என்ற மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றனர்.

ஏற்கனவே ஒழுங்கற்ற உணவு முறை பெரிய பொது சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது. அமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 9% பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது உணவுக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சூழலில் சமூகவலைத்தளங்களில் வைரலாகும் இந்த போக்குகள், அதை ஊக்குவிக்கிறது.

Latest news

மேற்கு ஆஸ்திரேலிய மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக தானியா ஜெயமோகன் வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனம்

டானியா ஜெயமோகன் (Tania Jeyamohan) தனது வழக்கறிஞர் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். இது மேற்கு ஆஸ்திரேலியாவின் நீதித்துறையில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது....

தொலைபேசி வழியாக இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்கும் புதிய சாதனம்

நீரிழிவு நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றப் பயன்படுத்தப்படும் Continuous Glucose Monitor (CGM), நீரிழிவு நோயாளிகள் அல்லாதவர்களிடமும் பிரபலமாகிவிட்டது. இது தொலைபேசி வழியாக பெறப்பட்ட வரைபடம் மூலம் இரத்த...

டிரம்ப்-புடின் சந்திப்புக்கு என்ன ஆனது?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான சந்திப்பு உடன்பாடு இல்லாமல் முடிந்தது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் ஆர்வமாக இருப்பதாக புடின்...

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 11 வெளிநாட்டவர்கள்

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இரண்டு மக்கள் வசிக்காத தீவுகளில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக பதினொரு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்குப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள ஆஷ்மோர் தீவில் ஆறு குழு...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு – நூற்றுக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

குயின்ஸ்லாந்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இப்போது அதிக தனிநபர் காய்ச்சல் விகிதத்தைக் கொண்டுள்ளனர். ஏனெனில் மாநிலம் முழுவதும் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ஆறு...