2025 ஆம் ஆண்டிலும் ஆஸ்திரேலியாவின் மிகவும் விலையுயர்ந்த நகரமாக சிட்னி முதலிடத்தில் உள்ளது.
உலகின் மிக விலையுயர்ந்த ரியல் எஸ்டேட் சந்தையைக் கொண்ட நகரமாகவும் சிட்னி மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் பிற நகரங்களுடன் ஒப்பிடும்போது சிட்னி அதிக பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கும் பெயர் பெற்றது.
2025 ஆம் ஆண்டு வாழ்க்கைச் செலவுக் குறியீட்டின் அடிப்படையில் டைம்ஸ் பத்திரிகை இந்த தரவரிசையை உருவாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் இந்த ஆண்டு மெல்பேர்ண் 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டில் ஃபைண்டர் தரவுகளின்படி, மெல்பேர்ண் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகவும் விலையுயர்ந்த நகரமாகும்.
இருப்பினும், வீட்டு வாடகை செலவுகளைப் பொறுத்தவரை மெல்பேர்ண் இந்த ஆண்டு 3வது இடத்தில் இருப்பதாக டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.
2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரங்களில் கான்பெர்ரா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அடிலெய்டு மூன்றாவது இடத்தில் உள்ளது.
புதிய தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த செலவுள்ள நகரமாக பிரிஸ்பேன் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது, பெர்த் ஐந்தாவது இடத்தில் உள்ளது.