நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான்.
ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம் நிகழ்ந்துள்ளது. அதே நேரத்தில் மற்றொரு நபரை இன்னும் காணவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு ராக்ஸ் கடற்கரையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஒன்பது வயது குழந்தை பாறைகளுக்கு இடையில் சிக்கியிருப்பதாக அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவசர சேவைகள் குறித்த இடத்திற்கு விரைந்து அவரை மீட்டெடுத்தனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், நேற்று காலை சிட்னியின் தெற்குப் பகுதியில் கடலில் அடித்துச் செல்லப்பட்டதில் ஒரு மீனவர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஈஸ்டர் தினத்தன்று நீரில் மூழ்கி உயிரிழந்த 6வது நபர் இவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நியூ சவுத் வேல்ஸில் 50 பேர் மீட்கப்பட்டதாகவும், புனித வெள்ளிக்குப் பிறகு சுமார் நூறு உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் மீட்புக் குழுக்கள் தெரிவித்தன.