சினிமா உலகில் தலைசிறந்த விருது ஆஸ்கர் விருதாகும் இந்த ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது.
இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கடந்த ஜனவரி மாதம் 97ஆவது ஆஸ்கர் விழா நடைபெற்றது. இந்நிலையில், அடுத்த ஆஸ்கர் விருது விழாவிற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 98ஆவது ஆஸ்கர் விருது விழா அடுத்த வருடம் மார்ச் 15ஆம் திகதி நடைபெற உள்ளது.
விருதுக்கான பரிந்துரைகள் ஜனவரி 22ஆம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்கான புதிய ஆஸ்கர் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி 2028ஆம் ஆண்டு நடைபெற உள்ள 100ஆவது ஆஸ்கர் விழா முதல் இந்த பிரிவில் விருது வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.