கென்யாவின் நைரோபி பகுதியில் சிங்கம் ஒன்று தாக்கியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நைரோபியில் உள்ள ஒரு தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள ஒரு பண்ணையில் இருந்து குழந்தை குறித்த சிங்கத்தால் தூக்கிச் செல்லப்பட்டதாக பல வெளிநாட்டு செய்திகள் தெரிவித்தன.
நீண்ட நேரத்திற்கு பின் பூங்காவிற்கு அருகிலுள்ள ஒரு ஆற்றின் அருகே சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு சிங்கம் காணாமல் போய்விட்டது. மேலும் வனவிலங்கு அதிகாரிகள் சிங்கத்தைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.