Newsபணியாற்ற முடியவில்லை என்றால் வீட்டுக்கு செல்லுங்கள் - ஜனாதிபதி ரணில் காட்டம்

பணியாற்ற முடியவில்லை என்றால் வீட்டுக்கு செல்லுங்கள் – ஜனாதிபதி ரணில் காட்டம்

-

கீழ்மட்ட அரச உத்தியோகத்தர்கள் தமது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அபிவிருத்தி செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எவருக்கும் இலவசமாக உணவு வழங்க அரசாங்கம் தயாரில்லை எனவும், வேலை செய்ய முடியாத அனைவரையும் வெளியேறுமாறு தாம் அறிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் வலியுறுத்தியுள்ளார்.

அனுராதபுரம் மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி நிற, ஜாதி, மத பேதமின்றி நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைக்கும் கடந்த கால பாடத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி கற்பித்தது. நாட்டுக்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கான தீர்மானங்களை அனைவரும் தாமதமின்றி எடுக்க வேண்டும். நாட்டுக்கு புதிய அரசியல் கோட்பாடு மற்றும் கலாசார அரசியல் பயணம் தேவை. பழைய அரசியல் அமைப்பு தற்போது மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குழுவொன்று நியமிக்கப்படும். அந்த விடயங்களில் வெளிநாட்டு ஆலோசனை சேவைகளையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவிலிருந்து உக்ரைனுக்கு மற்றொரு $100 மில்லியன் இராணுவ உதவிப் பொதி

ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் இராணுவ உதவிப் பொதியை அறிவித்துள்ளது. துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் உக்ரைனுக்கு ஒரு குறுகிய பயணத்தின் போது...

அதிக வரி விகிதம் கொண்ட வளர்ந்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும்

கடந்த ஆண்டு வரி உயர்வால் ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு கூறுகிறது. வளர்ந்த நாடுகளில் அதிக வரி விதிக்கும்...

பிரசவத்திற்கான ஆஸ்திரேலியாவின் சிறந்த மருத்துவமனைகள் பற்றிய ஆய்வு

ஆஸ்திரேலியாவில் சராசரி டெலிவரிக்கு குறைந்தபட்சம் $726 செலவாகும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரசவத்திற்கு அரசு அல்லது தனியார் மருத்துவமனைகள் சிறந்ததா என 1000 பெண்களிடம் ஃபைண்டர்...

ஆஸ்திரேலியாவில் சவாலாக மாறியுள்ள சமூக ஊடகங்கள்

குடும்ப வன்முறை முதல் பயங்கரவாதம் மற்றும் போர் அனைத்தையும் இணைக்கும் சமூக ஊடகங்கள் ஆஸ்திரேலியாவில் மிகவும் சவாலான பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்கள் ஒரு...

ஆஸ்திரேலியாவில் சவாலாக மாறியுள்ள சமூக ஊடகங்கள்

குடும்ப வன்முறை முதல் பயங்கரவாதம் மற்றும் போர் அனைத்தையும் இணைக்கும் சமூக ஊடகங்கள் ஆஸ்திரேலியாவில் மிகவும் சவாலான பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்கள் ஒரு...

சுட்டுக் கொல்லப்பட்ட Tiktok நட்சத்திரம்

ஈராக் சமூக ஊடக ஆர்வலரான ஓம் ஃபஹத் என்ற இளம் பெண் பாக்தாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஈராக் உள்துறை அமைச்சகம் ஒரு...