Newsஇலங்கையில் மண்ணெண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு - மக்கள் கடும் எதிர்ப்பு

இலங்கையில் மண்ணெண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு – மக்கள் கடும் எதிர்ப்பு

-

மண்ணெண்ணெய் விலையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யின் விலை 87 ரூபாவாக இருந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 253 ரூபாவால் விலை அதிகரிப்பு இடம்பெற்றது.

இதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலையாக 340 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்புக்கு மீனவர்கள் உட்பட பல தரப்பினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

சமையல் எரிவாயுவின் விலை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது, எனவே, மண்ணெண்ணெய் அடுப்புதான் பயன்படுத்தி வந்தோம், தற்போது அதன் விலையும் உச்சம் தொட்டுள்ளது. மின்சார கட்டணமும் அதிகரித்துள்ளதால், என்ன செய்வதென்று தெரியவில்லை என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மண்ணெண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் என வியாபார தரப்பு தெரிவிக்கின்றது.

Latest news

கலிபோர்னியாவில் கிறிஸ்துமஸ் புயல் – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சலஸ் பகுதிகளில் கிறிஸ்துமஸ் புயல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதோடு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3...

ஆஸ்திரேலியாவில் இளைஞர்களை விட பெரியவர்களிடையே இருக்கும் அதிக போதை பழக்கம்

ஆஸ்திரேலியர்களில் வயதானவர்கள் தேசிய சுகாதார வழிகாட்டுதல்களை மீறி மது அருந்துவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய சுகாதாரம் மற்றும் நலன்புரி நிறுவனத்தின் (AIHW) அறிக்கை, 50 மற்றும்...

ஜப்பானில் ஒரு தொழிற்சாலையில் நடந்த கத்திக்குத்தில் ஐந்து பேர் படுகாயம்

மத்திய ஜப்பானில் உள்ள ஒரு டயர் தொழிற்சாலையில் எட்டு பேர் கத்தியால் குத்தப்பட்டதாகவும், ஏழு பேர் எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய...

கிரேன் சரிந்து விழுந்ததில் 90 பேர் இடம்பெயர்வு

பலத்த காற்று காரணமாக கோல்ட் கோஸ்ட்டில் உள்ள சவுத்போர்ட்டில் உள்ள ஒரு கேரவன் பூங்காவில் 30 டன் எடையுள்ள கிரேன் சரிந்து விழுந்ததில் 90க்கும் மேற்பட்டோர்...

கிரேன் சரிந்து விழுந்ததில் 90 பேர் இடம்பெயர்வு

பலத்த காற்று காரணமாக கோல்ட் கோஸ்ட்டில் உள்ள சவுத்போர்ட்டில் உள்ள ஒரு கேரவன் பூங்காவில் 30 டன் எடையுள்ள கிரேன் சரிந்து விழுந்ததில் 90க்கும் மேற்பட்டோர்...

மெல்பேர்ண் காவல் நிலையத்தில் பெண்ணை தாக்கிய நபர்

மெல்பேர்ண் காவல் நிலையத்தில் ஒரு பெண்ணின் கையில் கத்தியால் குத்திய நபர் தப்பி ஓடிவிட்டார். நேற்று அதிகாலை 2:40 மணியளவில், Mahoneys மற்றும் Edgars சந்திப்பில் 32...