மெல்பேர்ணின் CityLink சாலையில் நடந்த விபத்தில் ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார் .
அவர் பயணித்த கார் லாரியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
36 வயதான அந்தப் பெண் விபத்துக்குள்ளானபோது சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தவறான பாதையில் ஓட்டிச் சென்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து அதிகாலை 2.10 மணியளவில் Church Street பாலம் அருகே நிகழ்ந்தது.
லாரியின் ஓட்டுநருக்கு காயம் ஏற்படவில்லை, ஆனால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து விக்டோரியா போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.