மேற்கு சிட்னியில் உள்ள Granny குடியிருப்பில் நேற்று இரவு 65 வயதுடைய ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, 31 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Homebush West-இல் உள்ள Courallie Avenue-இல் உள்ள வீட்டிலிருந்து இரவு 11.30 மணியளவில் அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. பின்னர் குடியிருப்பிற்கு விரைந்து வந்த பொலீஸார் ஒரு உடலைக் கண்டெடுத்தனர்.
NSW காவல்துறை கண்காணிப்பாளர் Robert Toynton கூறுகையில், “இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் ஆனால் அவர்களின் உறவு இன்னும் தெரியவில்லை” என்றார்.
65 வயதான அந்த நபர் முறையாக அடையாளம் காணப்படவில்லை, மேலும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.