ஆஸ்திரேலியாவில் ஆபத்தான போலி வலி நிவாரண மருந்து குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்தில் synthetic opioid இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“Oxycodone மாத்திரைகளைப் போலவே தோற்றமளிக்கும் போலி மருந்துகளில் இது கண்டறியப்பட்டது” என்று ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) தெரிவித்துள்ளது.
Oxycodone மாத்திரைகள் ஒரு மருத்துவ நிபுணரின் பரிந்துரைச் சீட்டுடன் மட்டுமே சட்டப்பூர்வமாகக் கிடைக்கும்.
ஆனால் ஏப்ரல் 2024 மற்றும் பெப்ரவரி 2025 இல் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட மருந்துகள் Nitazenes அடங்கிய போலி மருந்துகாள் என கண்டறியப்பட்டது.
“Nitazenes ஒரு சட்டவிரோதமான மற்றும் ஆபத்தான synthetic opioid ஆகும். இது கடுமையான மற்றும் கணிக்க முடியாத உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று AFP தெரிவித்துள்ளது.
Nitazenes-ஐ அதிகமாக உட்கொண்டால், சுயநினைவு இழப்பு, மேலோட்டமான அல்லது சுவாசம் நின்று போதல், நீல-ஊதா நிற தோல் மற்றும் மெதுவான அல்லது ஒழுங்கற்ற நாடித்துடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
Nitazenes, fentanyl-ஐ விட 10 மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் அவை தூள், மாத்திரைகள், நாசி ஸ்ப்ரேக்கள் மற்றும் vape திரவங்கள் வடிவில் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.