Newsயாழ்ப்பாணம், மட்டகளப்பில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

யாழ்ப்பாணம், மட்டகளப்பில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

-

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கும் நிகழ்வு நேற்று (12) பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

வரலாற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் நோக்கில் இந்த உப்பில்லாத முள்ளிவாய்க்கால் கஞ்சியானது யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் காய்ச்சி வழங்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்கும் செயற்பாட்டில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபடவுள்ளனர். அத்துடன் எதிர்வரும் புதன்கிழமை 14ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கட்டட தொகுதியில் மாபெரும் இரத்ததான நிகழ்வு ஒன்றினையும் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அனுபவித்த துயரங்களை எடுத்துக்காட்டும் முகமாக பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் கண்காட்சி ஒன்றினையும் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Latest news

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

அமெரிக்காவும் சீனாவும் வரி குறைப்புக்கு ஒப்புக்கொண்டன!

அமெரிக்காவும் சீனாவும் 90 நாள் கட்டண இடைவெளிக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பினரும் விதிக்கும் கட்டணங்களைக் குறைத்துள்ளன. சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளை 145% லிருந்து 30% ஆகவும்,...

போப் லியோவின் பதவியேற்பு விழாவிற்காக ரோம் செல்கிறார் பிரதமர்

போப் லியோ XIV இன் பதவியேற்பு திருப்பலியில் கலந்து கொள்ளவும், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ரோம் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை போப்பின் முறையான பதவியேற்பு...

IPL 2025 தொடர் மே 17 தொடங்கும் – BCCI அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட IPL தொடர் மே 17-ஆம் திகதி முதல் தொடங்கும் என்று BCCI நேற்று (மே 12) அறிவித்துள்ளது. இறுதிப்போட்டி ஜூன் 3-ஆம் திகதி நடைபெறும்...

அமெரிக்காவும் சீனாவும் வரி குறைப்புக்கு ஒப்புக்கொண்டன!

அமெரிக்காவும் சீனாவும் 90 நாள் கட்டண இடைவெளிக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பினரும் விதிக்கும் கட்டணங்களைக் குறைத்துள்ளன. சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளை 145% லிருந்து 30% ஆகவும்,...