ஆஸ்திரேலியாவில் போலி ஆவணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக முன்னணி வழக்கறிஞர்களின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது.
“போலி ID” என்ற சொல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும், போலி IDகள் ஆன்லைனில் வெளிப்படையாக விற்பனை செய்யப்படுவதாகவும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
போலி அடையாள அட்டைகளை விற்பனை செய்பவர்கள் 18 வயதுக்குட்பட்ட பயனர்களை குறிவைத்து, அடையாள அட்டை போலியானதா இல்லையா என்பதை அடையாளம் காணும் முக்கிய பாதுகாப்பு அம்சமான Hologram-ஐயும் போலியாக உருவாக்குவது தெரியவந்துள்ளது.
இதுபோன்ற அடையாள அட்டைகளை விற்பனை செய்பவர்கள் அல்லது வைத்திருப்பவர்களுக்கு 2,200 டாலர் வரை அபராதமும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, போலி அடையாள அட்டைகள் தொடர்பான கிட்டத்தட்ட 300 வழக்குகள் பதிவாகி, 100 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.