பிரிஸ்பேர்ணுக்கு தெற்கே உள்ள Ipswich-ல் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு ஒரு இளம் பெண் இறந்ததை அடுத்து, இரண்டு ஆண்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நேற்று இரவு 8 மணியளவில் Springfield Lakesல் உள்ள Ash Avenueல் உள்ள ஒரு வீட்டில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவரை மயக்கமடைந்த நிலையில் போலீசார் கண்டுபிடித்தனர்.
பல சோதனைகளுக்கு பின் அவள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அந்தப் பெண் இறப்பதற்கு முன்பு சிறிது காலம் தனது கணவர் (26) மற்றும் மைத்துனர் (28) ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்ததாக பொலிஸார் கூறினர்.
குறித்த இரு ஆண்கள் இருவரும் வீட்டில் கைது செய்யப்பட்டனர், பின்னர் அவர்கள் மீது குடும்ப வன்முறை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இருவரும் மே 19, திங்கட்கிழமை Ipswich மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.