Melbourneமெல்பேர்ணில் ஒருவரை வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கி வைத்து மிரட்டிய கும்பல்

மெல்பேர்ணில் ஒருவரை வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கி வைத்து மிரட்டிய கும்பல்

-

மெல்பேர்ணைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டிற்குள் நுழைந்த ஆயுதமேந்திய குண்டர்கள் தன்னைச் சுடப் போவதாக மிரட்டியதால் ஏற்பட்ட பயங்கரத்தைப் பற்றி ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் வீட்டின் பாதுகாப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.

ஒரு மரக் கம்பத்துடன் ஆயுதம் ஏந்திய மூன்று முகமூடி அணிந்த குண்டர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர்.

அவர்கள் ஜன்னல் வழியாக ஏறி, வீட்டு உரிமையாளர் Chris Middlemiss-ஐ சில நிமிடங்கள் பின்தொடர்ந்துள்ளனர்.

“அவர்கள் வெறும் இளம் ஆட்கள் என்றும், என்னால் மட்டுமே நிலைமையைக் கையாள முடியும் என்றும் நினைத்து நான் அவர்களை எதிர்கொண்டேன்” என்று வீட்டின் உரிமையாளர் கூறினார்.

கூட்டத்தில் ஒருவன் துப்பாக்கியை எடுத்து Middlemiss-ஐ நோக்கி குறிவைத்து மிரட்டி, பின்னர் வீட்டிற்கு வெளியே ஓடிய திருடர்கள் ஒரு மின்-சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர் என மேலும் கூறினார்.

குறித்த மிரட்டல் சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் Middlemiss இது ஒரு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என்று நம்புவதாகவும், குண்டர்கள் திரும்பி வருவார்கள் என்று அஞ்சுவதாக பொலிஸார் கூறினர்.

தகவல் தெரிந்த எவரும் 1800 333 000 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Latest news

ஏலத்திற்கு வரும் உலகின் மிக உயரமான விக்டோரியன் Gothic கோபுரம்

53 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு அசாதாரண ஆங்கில கோட்டை தான் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இந்த Hadlow Tower ஆகும். இந்த கோபுரம் 19 ஆம்...

அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தும் தேசியக் கட்சி

ஆஸ்திரேலியாவின் எரிசக்தி திட்டத்திற்கான அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்போவதாக தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் கட்சி முன்வைக்கும் முக்கிய சட்டமன்ற முன்மொழிவுகளில்...

ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை UNSW SMaRT மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வண்டல்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும் நாய்கள்

ஆஸ்திரேலியாவின் வேலை செய்யும் நாய்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $3 பில்லியன் மதிப்பைக் கொண்டு வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ANZ நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில்...

பெர்த்தில் இருந்து வந்த விமானத்தில் தீ விபத்து

பெர்த்தில் இருந்து பாலி நோக்கிச் சென்ற AirAsia விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. AirAsia விமானம் QZ545 இன் இயந்திரத்திலிருந்து தீப்பிழம்புகள் வெடித்ததால், விமானிகள் விமானத்தை பெர்த்...

ஏலத்திற்கு வரும் உலகின் மிக உயரமான விக்டோரியன் Gothic கோபுரம்

53 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு அசாதாரண ஆங்கில கோட்டை தான் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இந்த Hadlow Tower ஆகும். இந்த கோபுரம் 19 ஆம்...