அடிலெய்டின் தெற்கே கரைக்கு மிக அருகில் மூன்று மீட்டர் சுறா ஒன்று இருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
நேற்று காலை 10.30 மணியளவில் படகுத்துறையில் இருந்த மீனவர்கள் இந்த சுறா மீன் உலா வருவதை படம்பிடித்து, பின்னர் Onkaparingaவில் உள்ள Port Noarlungaவில் உள்ள surf lifesaving குழுவினருக்கு அறிவித்துள்ளனர்.
அவசர சேவைகள் அமைச்சர் Emily Bourke கூறுகையில், “இந்த ஆண்டு முழுவதும் வான்வழி ரோந்துகள் முன்பை விட அதிகமாக்கி உள்ளோம்” என்றார்.
சுறாக்கள் கரைக்கு அருகில் வருவது அதிகரித்து வருவதற்கான காரணத்தையும் நிபுணர்கள் ஆராந்து வருகின்றனர்.
கடலுக்கு செல்லும் பொதுமக்கள் தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாளுமாறும், முடிந்தளவு கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.