Breaking Newsஅவசர சேவை வரியை எதிர்த்து ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

அவசர சேவை வரியை எதிர்த்து ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

-

இன்று மாநில பட்ஜெட் வெளியிடப்படுவதற்கு முன்னதாக, மெல்பேர்ணின் CBD-யில் நடைபெறும் போராட்டத்தில் பல தீயணைப்பு வாகனங்கள் பங்கேற்கின்றன.

அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட அவசர சேவை வரிக்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் இணைந்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள், விவசாயிகள் மற்றும் தீயணைப்பு ஆணையத்தின் (CFA) தன்னார்வலர்கள் மாநில நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

வரிகள் அறிமுகப்படுத்தப்படுவதால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டாலர்கள் கூடுதலாகச் செலவாகும் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏற்கனவே பொருளாதார ரீதியாக சிரமப்படும் விவசாயிகளுக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கூடுதல் வரியை ஈடுகட்ட விவசாயிகள் பயிர்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், விக்டோரியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என்றும் விவசாயிகள் எச்சரிக்கின்றனர்.

கிராமப்புற தீயணைப்பு தன்னார்வலர்களுக்கு ஆதரவளிக்க விவசாயிகளும் போராட்டத்திற்கு வந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பேரணியில் 2000 முதல் 3000 பேர் வரை பங்கேற்றுள்ளனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Latest news

விக்டோரியா மாநில பட்ஜெட் – வழங்கப்படவுள்ள பல நிவாரணங்கள்

விக்டோரியாவின் முதல் பெண் பொருளாளர், ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக மாநிலத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வரும் "பொறுப்பான" முதல் பட்ஜெட்டை வழங்கியுள்ளார். வாழ்க்கைச் செலவு...

காஸாவை எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம் – இஸ்ரேல் பிரதமர்

'நாங்கள் போரை கைவிட மாட்டோம். காஸாவில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும்' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல்...

“Broken” குழந்தை பாதுகாப்பு அமைப்பு குறித்து ஒரு சிறப்பு விசாரணை

யின்ஸ்லாந்து அரசாங்கம், மாநிலத்தின் “Broken” child safety system குறித்து விசாரணை ஆணையத்தை அறிவித்துள்ளது. 17 மாத விசாரணைக்கு முன்னாள் கூட்டாட்சி நீதிபதி பால் அனஸ்டாசியோ தலைமை...

குயின்ஸ்லாந்து ஹேக்கரின் பல மில்லியன் டாலர் சொத்துக்கள் பறிமுதல்

குயின்ஸ்லாந்து ஹேக்கர் ஒருவரின் $4.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஆடம்பர சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருடப்பட்ட cryptocurrency மற்றும் cyber hacking தொடர்பான பல வருட விசாரணைக்குப்...

குயின்ஸ்லாந்து ஹேக்கரின் பல மில்லியன் டாலர் சொத்துக்கள் பறிமுதல்

குயின்ஸ்லாந்து ஹேக்கர் ஒருவரின் $4.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஆடம்பர சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருடப்பட்ட cryptocurrency மற்றும் cyber hacking தொடர்பான பல வருட விசாரணைக்குப்...

NSW-வில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக புதிய சட்டங்கள் அறிமுகம்

கடந்த இரண்டு ஆண்டுகளில் நியூ சவுத் வேல்ஸில் வீட்டு வன்முறையால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 39 ஆக இருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2023 ஆம் ஆண்டுக்குள்...