Breaking NewsNSW-வில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பனவு வழங்கும் மத்திய அரசு

NSW-வில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பனவு வழங்கும் மத்திய அரசு

-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு NSW LGAக்களில் வசிப்பவர்கள் மத்திய அரசின் பேரிடர் மீட்பு கொடுப்பனவைப் பெறுவார்கள் என மத்திய அரசு இன்று தெரிவித்தது.

Kempsey, Port Macquarie, Dungog மற்றும் Mid Coast Council-இல் வசிப்பவர்கள் 13 வார அவசரகால கொடுப்பனவுகளை அணுக முடியும் என்று அவசரகால மேலாண்மை அமைச்சர் கிறிஸ்டி மெக்பெய்ன் தெரிவித்தார்.

NSW மத்திய வடக்கு கடற்கரையில் வெள்ளத்தால் வீடுகள் பாதிக்கப்படும் போது வேலை செய்ய முடியாதவர்களுக்கு இழந்த சம்பளத்தை ஈடுகட்ட இந்த ஊதியம் வழங்கப்படுகிறது.

மத்திய மற்றும் NSW அரசாங்கங்கள் ஏற்கனவே 16 LGAக்களுக்கான பேரிடர் மீட்பு நிதி ஏற்பாடுகளைச் செயல்படுத்தியிருந்தன.

இந்த உதவித்தொகை சர்வீசஸ் ஆஸ்திரேலியா மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் மூன்று பேரைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த 24 மணி நேரத்தில் இந்தப் பகுதியில் மேலும் 100mm மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உதவிகள் மற்ரும் நிவாரணங்களுக்கு https://www.servicesaustralia.gov.au/ நாடவும்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...